இந்திய மகளிர் ஹாக்கி அணி டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியை துவம்சம் செய்தது

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியை துவம்சம் செய்தது. 3-வது லீக் ஆட்டத்தில் டிரினிடாட் அண்ட் டுபாக்கோ அணியை எதிர்கொண்ட இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீராங்கனைகள் எதிரணி வீராங்கனைகளை முன்னேற விடாமல் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் 9 கோல்கள் அடித்து அசத்திய அவர்கள், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் 5 கோல்கள் அடித்தனர். டிரினிடாட் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் 14-0 என்ற கோல்கணக்கில் வெற்றியை ருசித்தது இந்தியா.

தீபிகா தாக்கூர், ராணி ராம்பால், ஜஸ்பிரீத் கவுர் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர். வந்தனா கட்டாரியா, ரிது ராணி, அனுராதா தாக்கோம், அனுபா பர்லா மற்றும் ரிதுஷா ஆர்யா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.இந்த உற்சாகத்துடன் அடுத்து நாளை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

அணிஅணியைஅண்ட்இந்தியசெய்ததுடிரினிடாட்டுபாக்கோதுவம்சம்மகளிர்ஹாக்கி
Comments (0)
Add Comment