இந்திய வீரர் ஜடேஜாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சாட்சியம்

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அவரது போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜடேஜாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மேட் பிரையர் ஆகியோர் சாட்சியம் அளித்திருக்கும் விஷயம் கசிந்துள்ளது.

ஆண்டர்சனை நோக்கி ஜடேஜா எச்சரிப்பது போல் பேட்டை உயர்த்தியதாக பிரையரும், ஜடேஜா தான் முதலில் ஆண்டர்சனை தள்ளி விட்டார் என்று ஸ்டோக்சும் ஐ.சி.சி. நடுவரின் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால் அது போன்ற விதத்தில் ஜடேஜா நடந்து கொள்ளவில்லை என்று இந்திய தரப்பில் மறுக்கப்பட்டது.

அளித்திருக்கும்ஆகியோர்இங்கிலாந்துஇந்நிலையில்எதிராககசிந்துள்ளதுசாட்சியம்ஜடேஜாவுக்குபிரையர்பென்மேட்விஷயம்வீரர்கள்ஸ்டோக்ஸ்
Comments (0)
Add Comment