இந்திய வெளியுறவு செயலாளர் இன்று இலங்கையில் முக்கிய சந்திப்பு!

இந்திய வெளியுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் இன்று இலங்கை வருகிறார். இலங்கை உறவின் மேம்பாட்டிற்காக அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்கிறார். இதன் போது அவர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி,பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர் கட்சித்தலைவர் ஆகியோரையும் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மீனவர்களின் பிரச்னை குறித்த தீர்வுக்கு அவர் இந்த சந்திப்பின் போது முக்கிய அவதானம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியஇன்றுஇலங்கையில்சந்திப்புமுக்கியவெளியுறவு செயலாளர்
Comments (0)
Add Comment