இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உட்பட முப்பது அகதிகள் ஆறாவது நாளாக பட்டினிப்போராட்டம்

இந்தோனேசியா  பாலியில் உள்ள  IDC முகாமில் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட முப்பது ஆப்கானிஸ்தான் வேறு பல நாடுகளைச் சேர்ந்த 30 அகதிகள்  ஆறாவது நாளாக தொடர்ந்து பட்டினிப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறனர். கடந்த மூன்று வருடங்களாக தடுப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு இன்றுவரை எந்த முடிவும் கொடுக்கப்படவில்லை என்றும் ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரிகள் இன்று வரை தங்களை வந்து பார்க்கவும் இல்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தோனேசியாவில் எனினும் சுதந்திரமாக வெளியே வசிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டும் இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் ஆறாவது நாளாக தொடர்ந்து பட்டினிக்கிடப்பதால் பலரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Refugees hunger strike in Indonesia
Comments (0)
Add Comment