இந்த நிபந்தனையை ஏற்றால் திருமணம் செய்ய தயார்! மிதாலி அதிரடி

இந்திய மகளிர் அணியின் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் தனது திருமணத்திற்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட மிதாலி ராஜ் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். தந்தை துறை ராஜ் விமானப்படையில் பணிபுரிந்தார். தாய் லீலா ராஜ். தமிழை தாய் மொழியாக கொண்ட மிதாலி ராஜ் ஹைதராபாத்தில் பிறந்தார்.

34 வயதான மிதாலி ராஜ் இந்திய அணியை இரு முறை (ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில்) உலகக்கோப்பை பைனலுக்கு அழைத்துச் சென்றவர். தற்போது பெண்கள் கிரிக்கெட் சார்பில் அதிக ரன்கள் (6000) அடித்தத்துடன் அல்லாமல் நிறைய சாதனைகளை புரிந்துள்ளார். அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என்றவர். தற்போது இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் பைனலுக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றதன் மூலம் அனைவரின் மனதிலும் இடம் புடித்து விட்டார்.

தற்போது திருமணத்திற்கு ரெடியாகியுள்ள அவர் “என்னுடைய சாதனைகளை மதிக்க தெரிந்த ஒருவர் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

போட்டிக்கு ரெடியாக இருப்பவர்கள் களத்தில் இறங்கலாம்.

அணிஇந்தியாகிரிக்கெட்மகளிர்மிதாலி
Comments (0)
Add Comment