இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் இருக்கப் போகிற சந்திர கிரகணம் இன்று ஜூலை 27 ஆடி வெள்ளிக்கிழமை என்ற புனித நாளில் நிகழ இருக்கின்றது
அந்த அரிய நிகழ்வு பூமியில் நடக்கப் போவதல்ல. ஆனால் நம்மால் பார்க்க முடியும். ஆம். இன்று சந்திர கிரகணம். அதுவும் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் இருக்கப் போகிற சந்திர கிரகணம் இதுதான்.
அதுவும் இந்த சந்திர கிரகணம் மற்ற சாதாரண சந்திர கிரகணமாகக் கடந்து போவப்போவதில்லை. சூப்பர் பிளட் மூன் (super blood moon) ஆக தோன்றப் போகிறது.
ஆரம்பிக்கும் நேரம்
இன்று நள்ளிரவு சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் தோன்றுகிறது. அது சுக்கிரனின் நாளான வெள்ளிக்கிழமையும் கூட என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்படியே தொடர்ந்து வெள்ளியில் பயணித்து, சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் சென்று சனிக்கிழமை அந்த கிரகணம் நிறைவு பெறுகிறது.
ஜோதிடத்தில் கிரகணம் தொடங்கும் நேரத்தை கிரகண ஆரம்பம் என்றும் அடுத்த நிலையை கிரகண உன்மீலனம் என்றும் கிரகண மத்தியமம் என்றும் கிரகண நீமீலனம் மற்றும் கிரகண மோட்சம் என்றும் அந்த கிரகண காலகட்டத்தை பிரிப்பார்கள்.
இன்றைய சந்திர கிரகணமானது நள்ளிரவு 11.54 க்கு தொடங்கி, அடுத்த நாளை அதிகாலை 3.49 க்கு நிறைவடைகிறது.
இதில் சந்திரன் தோன்றும்போது மிகப் பெரிய நிலாவாக சூப்பர் பிளட் மூன் என்று சொல்லப்படும் சிவப்பு நிவாவாகத் தோன்றும். கிட்டதட்ட இந்த சூப்பர் பிளட் மூனாக மட்டுமே சந்திரன் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை வானில் இருக்கும்.
இந்த ஒரு மணி நேரம் 43 நிமிடங்களும் ஆசிய நாடுகள் முழுக்கவும்,வெறும் கண்களிலேயே பார்க்க முடியும்.