இந்த நூற்றாண்டில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்றிரவு தென்பட்டுள்ளது.
இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் நேற்று 27 ஆம் திகதி இரவு முதல் இன்று அதிகாலை வரை சுமார் 06 மணித்தியாலங்களும் 14 நிமிடங்கள் தென்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசியா, ஐரோப்பா அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பாகங்களிலும் இந்த சந்திர கிரணம் அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.