கடந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் துன்புறுத்தல்கள், மற்றும் சட்டத்துறை சுதந்திரம் குறித்த இரண்டு விசேட அறிக்கையாளர்கள் நேற்றுடன் தங்களின் விஜயத்தை நிறைவு செய்தனர்.இதன் நிமித்தம் அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது, நாடு ஜனநாயகத்தை நோக்கி செல்கின்ற போதும், இவ்வாறான சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் யுத்தத்தின் பின்னர் இந்த சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறைவடைந்துள்ள போதும், அவை முற்றாக அற்றுப் போகவில்லை. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.அதேநேரம் காணாமல் போனவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
தாங்கள் இலங்கைக்கு விஜயம் செய்து மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கைகளை எதிர்வரும் 3 மாதங்களில் அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாகவும், பின்னர் அடுத்த வருடம் நடைபெறும் மனித உரிமைகள் மாநாடுகளில் அவற்றை முன்வைக்கவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.