பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் கடந்த 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி ஒப்புதல் அளித்தான். கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் இந்த உரிமையை அந்நாட்டு பெண்கள் பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச பெண் ஆடைத்தொழிலாளர்கள் தொழிற்சங்கம் 1908 ஆம் ஆண்டு மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாட்டப்பட்டது. பின்னர் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மார்ச் 8 ஆம் திகதியை பெண்கள் உரிமைகள் மற்றும் உலக சமாதான தினமாக பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது