மேக்ஷம்
இன்று தொலைநோக்குச் சிந்தனையுடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
ரிக்ஷபம்
இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.
மிதுனம்
இன்று சக பணியாளர்கள் மூலம் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமிருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
கடகம்
இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வு உண்டாகும். மனதிலிருந்த குழப்பம் நீங்கித் தைரியம் ஏற்படும்.
சிம்மம்
இன்று மனக் குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாகவிருப்பது நல்லது. சமூகத்தில் கெளரவம், அந்தஸ்து அதிகரிக்கும்.
கன்னி
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளைக் கவனமாகச் செய்து முடித்துப் பாராட்டுப் பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும்.
துலாம்
இன்று உறவினர் வருகை காணப்படும். யாரிடம் பேசும் போதும் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
விருட்சிகம்
இன்று பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் எந்தவொரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.
மகரம்
இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதைத் தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். துணிச்சலுடன் ஈடுபட்டுக் காரிய வெற்றி காண்பீர்கள்.
கும்பம்
இன்று மனதில் வீண் மனக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரைச் சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.
மீனம்
இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளைச் செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.