மேக்ஷம்
இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைப்பட்ட நிதியுதவி கிடைக்கும். ஏற்கனவே,வரவேண்டியிருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.
ரிக்ஷபம்
இன்று புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாகக் காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம்.
மிதுனம்
இன்று குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுவது நன்மை தரும். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாகப் பாடங்களைப் படித்துக் கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள்.
கடகம்
இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். நீங்கள் அமைதியாகவிருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பிருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும்.
சிம்மம்
இன்று எதிரிகள் வகையில் சற்றுக் கவனமுடன் செயல்படவும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும்.
கன்னி
இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்று புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும்.
விருட்சிகம்
இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.
தனுசு
இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.
அகரம்
இன்று பணவிஷயத்தில் சிக்கனத்தைக் கடைப் பிடியுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாகவிருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும்.
மீனம்
இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கிப் பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். தடைப்பட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்துத் திருப்திகரமாகவிருக்கும்.