இன்றைய நாளில்..
ஜூன் 6
- 1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.
- 1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.
- 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
- 1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.
- 1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
- 1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.
- 1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
- 1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
- 1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
- 1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.
- 1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.
- 1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.
- 1981 – இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
- 1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.
- 2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.