மேக்ஷம்
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். குடும்பத்திலிருந்த மறைமுக எதிர்ப்புக்கள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
ரிக்ஷபம்
இன்று கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்துக் கூடும். திறமையாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாகவிருப்பது நன்மை தரும்.
மிதுனம்
இன்று புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாமையால் டென்ஷன் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.
கடகம்
இன்று குடும்பத்திலிருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையேயிருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
சிம்மம்
இன்று திடீர்க் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்தவொரு விடயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும்.
கன்னி
இன்று சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால், கெளரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
துலாம்
இன்று உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் புதிய பொறுப்புக் கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
விருட்சிகம்
இன்று திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும்.
தனுசு
இன்று அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும்.
மகரம்
இன்று பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
இன்று வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாகவிருப்பார். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகையிருக்கும். தடைப்பட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும்.
மீனம்
இன்று சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்துக் கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்.