மேக்ஷம்
இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும்.
ரிக்ஷபம்
இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளைச் செய்யாதீர்கள். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.
மிதுனம்
இன்று நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். யாரிடமும் அளவாகப் பழகுங்கள்.
கடகம்
இன்று சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்று வழக்கு விடயங்களில் வெற்றி பெற பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி
இன்று சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள்.குடுமப வாழ்வில் பொறுமை தேவை.
துலாம்
இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
விருட்சிகம்
வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம்.
தனுசு
இன்று சொத்துச் சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும்.
மகரம்
இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்ப்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது.
கும்பம்
இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விடயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும்.
மீனம்
இன்று மேற்படிப்பு விடயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மாணவ மணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும்.