மேக்ஷம்
தொழில் வியாபாரத்தில் இலாபம் கூடும். ஆனால், கைக்குப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும்.
ரிக்ஷபம்
குடும்பத்திலிருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறைப் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கடகம்
இன்று வரவேண்டிய பணம் இழுபறியாகவிருந்தாலும் வந்து சேரும்.. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளின் கல்விக்கான செலவு கூடும். இல்லறத்திலிருந்த சச்சரவு தீரும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
கன்னி
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம்.
துலாம்
உத்தியோகத்திலிருப்பவர்கள் மற்றவர்களை நம்பிப் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும்.
விருட்சிகம்
சில்லறைச் சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்துத் திருப்தி தரும்.
தனுசு
கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
மகரம்
சந்தோஷமான செய்தி வந்து சேரும். மனநிம்மதி கிடைக்கும். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.
கும்பம்
முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்
தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவையறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.