மேக்ஷம்
தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி,நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும்.
ரிக்ஷபம்
நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.
மிதுனம்
உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். எல்லாவகையிலும் இலாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடைபெறும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.
கடகம்
குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையேயிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்
சிலர் வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்.
கன்னி
தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான இலாபம் அடையலாம். புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும்.
துலாம்
உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம்.
விருட்சிகம்
மேலதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்துப் பாராட்டுப் பெறுவீர்கள். பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம்.
தனுசு
மேலதிகாரிகளுடன் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள்.
மகரம்
சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும்.
கும்பம்
எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள்.
மீனம்
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பணத் தேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் அவப்பெயர் உண்டாகலாம்.