மேஷம்
இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்துத் திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும்.
ரிஷபம்
இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபார மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்று விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
கடகம்
இன்று கவனமாகச் செயற்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆடை அணிகலன்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும்.
சிம்மம்
இன்று பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனக் குழப்பம் நீங்கித் தெளிவு பெறுவீர்கள்.
கன்னி
இன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும்.
துலாம்
இன்று புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சலிருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்களின் வருகை காணப்படும். உங்களது ஆலோசனையைக் கேட்டுச் சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்புக் கூடும். பணவரத்து திருப்திதரும்.
விருச்சிகம்
இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறுவீர்கள். எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
தனுசு
இன்று உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாசப் பயணங்களும் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி காணப்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் காணப்படும்.
மகரம்:
இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாகவிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்- மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் கருத்து வேற்றுமை ஏற்படாமலிருக்கும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாமர்த்தியமாகச் செயற்பட்டுக் காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
மீனம்
இன்று காரியங்களில் தடை, தாமதம் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனக் குழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனைத் தரும்.