மேஷம்
இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்துத் தாமதப்படும். மாணவர்களுக்கு எந்தவொரு பாடத்தைப் படித்தாலும் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.
ரிஷபம்
இன்று எதிலும் இலாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டுப் பாராட்டுப் பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மிதுனம்
இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இலாபம் கூடும். ஆனால், கைக்குப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
கடகம்
இன்று குடும்பத்திலிருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறைப் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
சிம்மம்
இன்று தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவுஉண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கல்விக்கான செலவு கூடும்.
கன்னி
இன்று பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது.
துலாம்
இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் மற்றவர்களை நம்பிப் பொறுப்புக்களை ஒப்படைக்காமலிருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்களிருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் வரலாம். கவனமாகவிருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.
தனுசு
இன்று தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்துத் திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்:-
மகரம்
இன்று உங்களுடன் பழகுபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடைபெற வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.
கும்பம்
இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் நன்கு நடைபெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையாகப் பணிகளைச் செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.
மீனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.