இன்றைய ராசிபலன்…

மேஷம்

இன்று முயற்சியெல்லாம் வெற்றியாகும். வாழ்க்கைத்துணையின் உதவி எல்லா வகையிலும் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு இது ஒரு பொற்காலம்.

ரிஷபம்

இன்று நோய்களின் தாக்கம் குறையும். வாகனங்கள் நினைத்தபடி ஒத்துழைக்கும். சுற்றமும் உறவும் அலுவலகமும் ஒருசேர நன்மையாகவே இயங்கும்.

மிதுனம்

இன்று வாழ்க்கைத் துணைக்கு கழுத்துவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணும். ஏஜென்ட் மூலம் செய்யும் பங்கு, பண பரிவர்த்தனைகள் நஷ்டமடையக் கூடும்.

கடகம்

இன்று வீட்டுப் பெண்கள் முகச்சுளிப்பு காட்டினாலும் பொறுத்துக் கொள்வதும் எதிர்வாதம் செய்யாதிருப்பதும் நல்லது.

சிம்மம்

இன்று பணத்தை முதலீடுகளாக மாற்ற சிறந்த நாள். சகோதர உதவி பரிபூரணமாகக் கிட்டும். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே பார்த்துக் கொள்வது நல்லது.

கன்னி

இன்று புதிய வேலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிட்டும். அதர்மமான காரியங்களில் ஈடுபட நேர்ந்தால் முழு மனதுடன் தவிர்த்து விடுங்கள்.

துலாம்

இன்று அனைத்து செயல்களையும் கவனமாக நடத்தி வரவேண்டும். எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். பிரச்னைகள் வந்த வண்ணம்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி நகர்த்தி வந்தால் போதும்.

விருச்சிகம்

இன்று ஒரு திடீர் கலகத்தால் நீங்கள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஓர் இடத்தில் கட்டுண்டு கிடக்கும்படியாக ஆகும். மிகுந்த கவனம் தேவை.

தனுசு

இன்று லாபங்கள் இரட்டிப்பாகும். புதிய செயல்களை இந்தக் காலகட்டத்தில் தள்ளிப் போடக் கூடாது. திட்டமிட்டபடி எல்லா செயல்களும் நிறைவேறும் நாள் இது.

மகரம்

இன்று ரியல் எஸ்டேட் துறையினர் ஒப்பந்தங்களை முடித்து விடுவது நல்லது. கடும் முயற்சிகளின் பேரில் வேலை கிடைக்கும்.

கும்பம்

இன்று வாகன வசதிகளுடன் கிடைக்கப் பெறுவர். முக்கியமானவர்களை நேரே காண்பதும் சன்மானங்கள் பெறுவதும் நடைபெறும்.

மீனம்

இன்று சுபவிசேஷங்கள் தாமாக நடக்கும். கவலைப் படாதீர்கள். திருமண வாய்ப்புகள் திடீரென பலிதமாகும். குடும்பப் பெண்களுக்கு தாய்வழி சொத்துகள் லாபமாகும்.

நாள்பலன்ராசி
Comments (0)
Add Comment