இன்று பயணங்களால் பலன் உண்டு. எதிலும் துடிப்புடனும் ஈடுபாட்டுடனும் இயங்குவீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் கடமையிலும் காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள்.
இன்று கொஞ்சம் சந்தேகப்புத்தி வளரும். செல்வச் செழிப்போடு செல்வாக்கும் உங்களுக்கு வந்து சேரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள்.
இன்று தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும்.
இன்று ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்கும்.
இன்று மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள்.
இன்று மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதிருங்கள்.
இன்று உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகு கூடும். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்குண்டான ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும்.
இன்று மேல்அதிகாரிகள் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.
இன்று இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். வாழ்க்கைத்துணையிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள்.