இன்றைய ராசி பலன்…

மேக்ஷம்

வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.

ரிக்ஷபம்

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகமிருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

மிதுனம்

குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் இறுதியில் தீரும். கணவன்- மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பீர்கள்.

கடகம்

உங்களின் பணத் தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனத் திருப்தியைத் தரும்.

சிம்மம்

மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்துத் திருப்தி தரும்.

கன்னி

தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

துலாம்

குடும்பத்திலிருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும்.  பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

விருட்சிகம்

எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புக்கள் நீங்கும். டென்ஷனைக் குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும்.

தனுசு

எதிர்ப்புக்கள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையைத் தரும்.

மகரம்

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

கும்பம்

உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

மீனம்

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

நாள்பலன்ராசி
Comments (0)
Add Comment