200 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின், உசைன் போல்டிற்கு கடும் சவாலாக விளங்கிய நிலையில் போல்ட் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஆடவர் 200 மீட்டர் இறுதி சுற்றில் ஜமைக்காவின் உசைன் போல்ட், 19.55 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டினார். அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் வெள்ளி பதக்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்திலும் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.