இராணுவ வாகனப் புழுதிக்குள் குழந்தைகளோடு சொந்த நிலத்தை மீட்க இரவிரவாக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாபுலவு மக்கள்..

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள கேப்பாபுலவு நிலத்தினை மீட்க கடந்த 01.03.2017 தொடக்கம் இன்றுவரை 26 நாட்களாக இரவு பகலாக எமது உறவுகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகள் சிறுவர்கள், வயோதிபர்கள்  என அனைவரும் இராணுவ வாகனப் புழுதிக்குள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வாரம் ஸ்ரீலங்காவின் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் விரைவில் மக்களின் காணிகள் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அந்த வகையில் விரைவில் தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறும் இல்லையெனில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அமைச்சர் சுவாமிநாதனுக்கு மக்கள் மனு ஒன்றினையும் சிவமோகன் ஊடாக கையளித்துள்ளனர்.

 

ஆக்கிரமிப்புகேப்பாபுலவுநிலமீட்புபிலக்குடியிருப்புபோராட்டம்மக்கள்
Comments (0)
Add Comment