இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனையான சானியா ஜோடி இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சானியா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், 3-ம் நிலை ஜோடியான ஹங்கேரி- பிரான்ஸ் ஜோடியான திமேயா பாபோஸ்- கிறிஸ்டினா மிலாடேநோவிக்கை எதிர் கொண்டது. இதில் சானியா ஜோடி 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
முதல் செட்டில் 2-3 என பின்தங்கிய சானியா ஜோடி 5-வது பாயிண்டுக்கான சர்வீசை எதிர் ஜோடி திறமையான எதிர்கொண்டதாலும், தங்களது சர்வீசை திறமையாக முடித்ததால் 4-2 என் முன்னிலை பெற்றது. அதன்பின் சானியா ஜோடி அந்த செட்டில் ஆதிக்க செலுத்த இயலவில்லை. இதனால் 6-4 என முதல் செட்டை இழந்தது.
இரண்டாவது செட்டில் 1-1 என சமநிலையில் இருந்து சானியா ஜோடி பின்னர் 6-3 என அந்த செட்டை இழந்தது.
இந்தியன் வேல்ஸ், மியாமி, சார்லெஸ்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற சானியா ஜோடி இந்த சாம்பியன் பட்டத்தை தவற விட்டது.