இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இரு அணிக்குமிடையிலான ஒருநாள் போட்டித் தொடருக்கான முதல் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றது.சீரற்ற காலநிலையால் இன்றைய போட்டி தாமதாக ஆரம்பிக்கப்பட்டமையால், 50 ஓவர்கள் போட்டி 45 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டிருந்தது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 89 ஓட்டங்களையும் மஹெல ஜெயவர்த்தன 63 ஓட்டங்களையும் விளாச 45 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைக் குவித்தது இலங்கை.

பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.இதன்படி 276 என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைக் பெற்று நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பாக சொஹிப் மசூட் 89 ஓட்டங்களையும் பாவட் அலாம் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.போட்டியின் ஆட்டநாயகனாக சொஹிப் மசூட் தெரிவு செய்யப்பட்டார்.

அணிஇரண்டுஇலங்கைக்குஒருநாள்சுற்றுப்டெஸ்ட்பயணம்பாகிஸ்தான்போட்டிகளில்போட்டிகள்மற்றும்மூன்றுமேற்கொண்டுள்ளவிளையாடுகின்றது.
Comments (0)
Add Comment