இலங்கை அணியில் மாற்றம் – சங்கா நீக்கம்

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு துடுப்பாட்டக்காரர்களின் மோசமான ஆட்டம் தான் காரணம் என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றியடைந்திருந்த இந்திய அணி, 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த தோல்வி பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், டில்ஷான், ஜெயவர்த்தனே தவிர மற்ற துடுப்பாட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் இந்த போட்டி வீரர்களின் நடவடிக்கையை தெரிந்து கொள்ள ஒரு நல்ல பயிற்சி போட்டியாக அமைந்தது.

240 ஓட்டங்களை வைத்து இந்திய அணிக்கு பந்து வீசுவது என்பது பந்து வீச்சாளர்களுக்கு சவாலான ஒரு விடயம். நாங்கள் ஒரே தவறை தான் மீண்டும் செய்துள்ளோம். 300க்கும் மேல் ஓட்டங்கள் எடுத்தால் தான் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும்.

ஆனால் 3 போட்டிகளிலும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. சரியாக துடுப்பெடுத்தாடவில்லை. மீதமுள்ள 2 போட்டிகளுக்கு இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சங்கக்காரா, தமிகா பிரசாத், சுரஜ் ரந்தீவ், உபுல் தரங்கா ஆகியவர்களுக்கு பதிலாக திரிமானே, சண்டிமால், ஷமிந்தா எரங்கா, அஜந்தா மெண்டீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர் என்று தெரிவித்துள்ளார்.

அணிஇந்தியாஇலங்கைஒருநாள்தலைவர்துடுப்பாட்டம்தொடர்தோல்விமேத்யூஸ்வெற்றி
Comments (0)
Add Comment