இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சோஹைல் விலக வாய்ப்பு

இலங்கையில் கிரிக்கெட் தொடருக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் காயம் காரணமாக விலகலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, அணியின் மூத்த தேர்வாளர் ஹாருன் ரஷீது கூறுகையில், “பயிற்சியின்போது சோஹைலின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. சிறந்த மருத்துவர்கள் மூலமாக அவரது காயம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரை தொடர்ந்து விளையாடச் செய்வதா அல்லது பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதா என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

 எனினும், காயத்தில் இருந்து மீண்டுவரஹாரிஸ் சோஹைல் 2 வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைகாயம்கிரிக்கெட்சுற்றுப் பயணம்பாகிஸ்தான் அணிபேட்ஸ்மேன்விலக வாய்ப்புஹாரிஸ் சோஹைல்
Comments (0)
Add Comment