நாம் ஒருவரை முழுமையாக புரிந்து, அவர்களின் குறைகள் முழுவதும் அறிந்தும், அவர்களை நேசித்தோம் என்றால் கடைசி வரை நீடிக்க கூடிய கமிட்மென்ட்க்கு நாம் தயார் என்று அர்த்தம்.
நமக்கு பிடித்தமான குணங்களுடன் ஒருவரை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் நமது துணையை அவர்களின் இயல்பான குணங்களுடன் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆரோக்கியமான உறவுக்கு இது தான் அடிப்படை. மனிதர்களின் இயல்பான குணங்களுடனே அவர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி
எல்லா உறவுகளை நிலைக்க செய்வதிலும் சில பல சவால்கள் வரும். நம்மால் அதை தவிர்க்க முடியாது. அதற்கு நீங்கள் ரெடியா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த சவால்கள் தாண்டி வருவதில் தான் வாழ்க்கையின் சுவாரசியங்கள் உள்ளது. கேள்வி
பல பேர் தங்களுடைய முன்னாள் காதலருடன் நட்பு ரீதியான உறவு முறையில் இருப்பார்கள். கடந்த காலத்தின் நினைவுகளை விட முடியாமல், முன்னாள் காதலருடன் நேரம் செலவழிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து முழுமையாக விலகி இருந்தால் தான், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நம்மால் போக முடியும்.
அவர்களுடனான பேச்சுவார்த்தை, அவர்களை சந்திப்பது என அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முன்னாள் காதலருடன் உள்ள தொடர்புகளை விட்டு முழுமையாக வெளிவராமல் நாம் எந்த புதிய உறவுகளுக்குள் நுழைவது பற்றி யோசிக்க கூட கூடாது.
நம்மை நாமே நேசிக்க ஆரம்பிக்கும் போது, நம்மை விரும்பும் உறவுகளையும் நம்மால் நேசிக்க முடியும். நமது உண்மையான சந்தோஷம் நம்மிடம் தான் உள்ளது. நம்முடன் நாமே நேரம் செலவழிக்க விரும்பும் போது, துணையுடன் நேரம் செலவழிப்பதையும் கண்டிப்பாக விரும்புவோம்.
துணை என்பது நம்மை முழுமைப்படுத்த அல்ல, நம்மை நேசிக்க நம்மை முழுமைப்படுத்த துணையை தேடுவதற்கு, நாம் தனியாக இருப்பதே சிறந்தது. வாழ்க்கையின் கடைசி வரை ஒருவருடன் பயணிக்க விரும்பும் போது, ஒருவருடன் செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் நாம் விரும்பும் போது,தைரியமாக வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகலாம்.
விட்டு கொடுத்து போக தயாராகுங்கள் எந்த ஒரு உறவும் உறுதியாக நிலைத்து நிற்கவும், அது முழு மகிழ்ச்சியுடன் செழிக்கவும் அடிப்படையே விட்டு கொடுத்து அனுசரித்து போவது தான். நமது வாழ்க்கை என்பது அந்த உறவுகள் மட்டும் தான் என்று இல்லாவிட்டாலும், நமது வாழ்க்கையின் ஆழம் வரை அந்த உறவுகள் புகுந்து விடுகிறது.
நமது துணையின் நண்பர்கள் முதற்கொண்டு அவர்களது குடும்பம், பழக்க வழக்கங்கள் ,வாழ்க்கை முறை ஏன்! வளர்ப்பு பிராணிகள் கூட நம்மிடம் நெருங்கி விடுகிறார்கள். அதே போல் நம்முடைய வாழ்க்கை முறைகளோடு துணையும் கலந்து விடுகிறார்கள். அதனால் அனுசரித்து விட்டு கெடுத்து போவது என்பது மிக முக்கியமானது.
. அதனால் நம்மை நாமே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உறவுகளுக்கு தேவையான முழு அர்ப்பணிப்பு கொடுக்க நாம் தயாரா என்று நம்மை நாமே சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். உறவுகளை நிலைக்க செய்வதற்கு இது தான் அடிப்படை.