ஈபிடிபியினர் ததேகூட்டமைப்பு மீது தாக்குதல்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூடியதும் வழமை போன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பமாகியது. அரச அதிபர் தமது வரவேற்புரையில் இது தேர்தல் காலம் என்ற வகையில் இங்கு அரசியலைப் பற்றியோ அன்றி ஒரு கட்சியைப் பற்றியோ யாரும்பேச வேண்டாம் என தேர்தல் ஆனையாளர் அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இணைத் தலைமைகளில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் உரையாற்றினார். அவர் தனது உரையில் அரசாங்க அதிபரின் தேர்தல் ஆணையாளரின் சுற்றறிக்கையை குறிப்பிட்டு தனது உரையை மிகவும் சுருக்கிக் கொண்டதுடன் ஏட்டிக்கு போட்டியான எதிர்ப்பரசியலை கைவிட்டு மக்களுடை அபிவிருத்தி சம்பந்தமாக இன்றைய கூட்டத்தில் பேச வேணடும் எனவும் வேண்டிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஈபிடிபி ஆயுதக்குழுவின் தலைவரும் பாரம்பரிய மற்றும் சிறு கைத் தொழில்கள் அமைச்சர் தனது உரையில் வடமாகாண சபை தேர்தல் காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கூறிய விடயங்கள் எதனையும் செய்யவில்லை வட மாகாண ஆளுனரை மாற்றுவதாக கூறி மாற்றினார்களா? அல்லது இராணுவத்தை இல்லாது செய்வதாக கூறி ஒரு துண்டு நிலத்தையேனும் மீட்டார்களா? தமிழ் மக்களை உணர்ச்சியூட்டி வாக்குகளை பெற்று அரசியல் நடத்துவதாகவும் சுகபோக வாழ்க்கையை அமைச்சர்கள் வாழ்வதாகவும் இதற்கு அரசாங்கத்துடன் பேரம் பேசும் வட மாகாண சபையின் அமைச்சர்கள் மக்களின் அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லையென்ற குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி உரையாற்றினார்.

இந்த நிலையில் அரசியல் பேசுவதாகக் குறிப்பிட்ட சிவாஜிலிங்கம் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இந்நிலையில் ஈபிடிபி பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட நிலையில் பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

யாழ் மாவட்ட ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் கூடிய ஒரு மணித்தியாலத்தினுள்ளேயே மண்டபம் போர்க்களமாகியதினால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் முதலமைச்சரின் உரையைத் தொட்ர்ந்து ஆயுததாரியும் ஆயுதக்குழுவின் தலைவரும், பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிய போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறுக்கிட்டு அரசியல்பேச வேண்டாம் என வலியுறுத்தினார்.

இந் நிலையில் அமைச்சருக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையே வாய்த்தர்க்கம் நடைபெற கரவெட்டி ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஸ்ரீரங்கேஸ்வரன் குறுக்கிட்டு சிவாஜிலிங்கத்தை திட்ட அதனைத் தொடர்ந்து கோப்பாய் தெல்லிப்பளை உடுவில் பிரதேச சபைகளின் ஈபிடிபி உறுப்பினர்களும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் சிவாஜிலிங்கத்தை பேசினார்கள்.

ஒரு நிலையாக அமைதி வரும் நிலையில் மீண்டும் சிவாஜிலிங்கம் வாதத்தில் ஈடுபட்ட நிலையில் குழப்புபவர்கள் வெளியேற வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பார்த்து எச்சரிக்கும் பணியில் டக்ளஸ் கூறினார்.

இதேவேளை ஈ.பி.டி.பி உறுப்பினாகள் மறு பக்கத்தில் இருந்து மிகவும் ஆக்ரோசமாகக் கத்தி கூச்சலிட்டுக்கொண்டு இருந்த நிலையிலும் அமைச்சர் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலமை காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவாஜிலங்கத்தின் ஒலி வாங்கயை பறிக்க எதிர் வளத்தில் இருந்து வேலனை பிரதேச சபைத்தலைவர் சிவராசா போல் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்த பக்கம் சென்று ஒலிவாங்கயைப் பறிக்க முற்பட்ட நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே எழுந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈ.பி.டி.பியினர் தமது இருக்கைகளை தூக்கி தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்த பக்கம் தூக்கி வீசியதுடன் அவர்கள் பக்கம் சென்று தண்ணீர் போத்தல்கள்கள் கைகளினாலும் தாக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு பகுதியினரும் ஒரு வரை ஒருவர் தாக்கத் தொடங்கிய நிலையில் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவு அதிரடிப்படையினர் உள் நுழைந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வெளி நடபுச் செய்தார்கள்.

வட மாகாணசபையின் சுற்றுச் சூழல் விவசாய மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஜங்கரநேசன் ஈ.பிடி.பி உறுப்பினர்களின் தாக்குதலுக் உள்ளாகி முகத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் யாழ் மாவட்ட ஒருங்கனைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம் பெற்றவேளையில் இந்த சம்பவம் இடம் பெற்றது.

எதிர் எதிரே இருந்த இருதரப்பினரும் ஒரு கட்டத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் தமது இருக்கைகளை விட்டு எழுந்து சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்த பக்கம் சென்று தண்ணீர் போத்தல்கள் கதிரைகளினால் தாக்கியதில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதிபர்அரசுஈபிடிபிஒருங்கிணைப்புகலப்புகுழுகூட்டம்கைததேகூதர்க்கம்தேர்தல்மாவட்டம்யாழ்ப்பாணம்வரவேற்புவாய்
Comments (0)
Add Comment