ஈழ ஏதிலிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் கனேடிய அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

ஈழ ஏதிலிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் கனேடிய அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டினை கனடாவின் ஏதிலிகள் செயற்பட்டாளர்கள் செயிட் ஹசன் சுமத்தியுள்ளார்

கடந்த  2010ம் ஆண்டு  கனடாவிற்கு ஏதிலியாக சென்ற  கிருஷ்ணகுமார் கனகரட்ணம் என்ற நபர்  மெக்ஆர்தர் என்ற தொடர் கொலையாளியால் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் அவருக்கான ஏதிலி அந்தஸ்த்து வழங்கும் விடயத்தில் கனடாவின் சட்டத்திட்டங்கள் மூலம் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக கனடாவில்  அவர் மறைந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக, கனடாவின் ஏதிலிகள் செயற்பட்டாளர்கள் செயிட் ஹசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே கனடா அரசாங்கம் ஏதிலிகள் தொடர்பில் விரைவாக நடவடிக்கைகளை எடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏதிலிகள்கனடாகோரிக்கைபாதுகாப்பு
Comments (0)
Add Comment