கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிய எங்களுக்கு குளத்திற்கு நடுவில் காணி கொடுத்து எங்களை ஒவ்வொரு மழைகாலத்திலும் இடம்பெயர்ந்து அவலப்படும் நிலையை கொடுத்து விட்டார்கள் என கிளிநொச்சி 2ம் வாய்க்கால் மக்கள் ஈ.பி.டி.பி மீது கண்ணீர்மல்க குற்றம் சுமத்துகின்றார்கள்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணகை நகர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் மிக நீண்டகாலம் சுமார் 50 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.
இந்நிலையில் ஈ.பி.டி. பியினர் குறித்த பகுதிக்குச் சென்று மாற்றிடங்களை தருவதாக கூறியதுடன், மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்தால் வாழ முடியாது,
அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களையும் வழங்க முடியாது. என கூறி மாற்றிடங்களில் குடியேற்றுவதாக கூறி ஸ்கந்தபுரம்- 2ம் வாய்க்கால் பகுதியில் காணிகளை வழங்கி குடியேற்றியதுடன், அரசாங்க வீட்டுத்திட்டங்களும் மக்கள் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் கடந்த சில தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால், மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்றிடங்களுக்குள் வெள்ளநீர் பெருமளவில் புகுந்துவிட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையிலும் தங்கியிருக்கின்றனர்.
மேலும் வழங்கப்பட்ட மாற்றிடத்தில் பல குடும்பங்கள் வீடுகளுக்கான அடித்தளங்களையும், போட்டிருக்கின்றன. இந்நிலையில் ஈ.பி.டி.பியின் பேச்சினை நம்பி குடியேறிய மக்கள் நடுத்தெருவுக்கு இப்போது வந்திருக்கின்றனர்.