உசேன் போல்ட் 3வது தங்கம் வென்று அசத்தல்!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறுகின்றது. இதில் உசேன் போல்ட் 3-வது தங்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் நெஸ்டா கர்ட்டர், அசபா பவெல், நிக்கெல் அஷ்மீட், உசேன் போல்ட் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி 37.36 வினாடிகளில் இலக்கை கடந்து தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

ஏற்கனவே 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்ற உசேன் போல்ட்டுக்கு இது 3வது தங்கப் பதக்கம். ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் மோ பாரா 13 நிமிடம் 50.38 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா 62.24 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 9-வது இடமே பிடித்தார். போலந்தின் மலாசோவ்ஸ்கி 67.40 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உலக தடகள போட்டிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பதக்கப்பட்டியலில் கென்யா 6 தங்கம் உள்பட 13 பதக்கத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.

உசேன் போல்ட்உலக தடகள போட்டிசாம்பியன்ஷிப்தங்கம்தொடர் ஓட்டம்பெய்ஜிங்
Comments (0)
Add Comment