நேற்றைய தினம் முல்லைத்தீவு உடையார் கட்டு தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்,புனரமைக்கப்பட்ட பொது நூலக கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் விசேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் குறித்த நூலகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இநிகழ்வு உடையார் கட்டு தெற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ந.கிரியாகரன் தலைமையில் நடைபெற்றது
நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைவர் செ.பிறேமகாந் கிராம சேவையாளர்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
நிகழ்வில் முதன்மை விருந்தினர் சி.சிவமமோகன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆ.புவனேஸ்வரன்,ம.பிரதீபன் ஆகியோர் நூலகத்தின் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்துவைத்து கட்டத்தினையும் திறந்து வைத்துள்ளார்கள்.
கட்டத்தின் வழிபாட்டு அறையினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் செ.பிறேமகாந்த அசர்கள் சுடர் ஏற்றி தொடக்கிவைத்துள்ளதை தொடர்ந்து நூலகத்தில் வைக்கப்பட்ட பத்திரிகைகளை பார்வையிட்டுள்ளார்கள்.
தொடர்ந்து வைபவ ரீதியாக நூலகத்தின் சாவி கிராமிய அமைப்புக்களிடம் கையளிகப்பட்டுள்ளது.