உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கினால் மட்டுமே துயிலுமில்லங்கள் விடுவிக்கப்படுமாம்!

மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராட்சி ஆகியோர் அனுமதி வழங்கினால் மட்டுமே வன்னி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படும் என வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார்.
வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவிற்கும் தமிழ் விருட்சம் அமைப்பிற்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்ரீலங்காவின் வன்னி இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர்ஆகியோர் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்படும் என அறிவித்தல் வழங்கினால், குறித்த துயிலும் இல்லம் விடுவிக்கப்படும் என குறிப்பிட்ட்டுள்ளார்.

ஆக்கிரமிப்புஇராணுவம்மாவீரர் துயிலுமில்லம்மைத்திரிபால சிறிசேனவன்னிவிடுவிப்பு
Comments (0)
Add Comment