இந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறும் மூன்று மாதத்துக்குள் தீர்வு பெற்றுத் தருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் நேரில் சென்று மக்களிடம் முதலமைச்சரின் வாக்குறுதியை கூறி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.