தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் ஏப்ரல் 3ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன.
இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 24 கோடி ரூபா பரிசுத் தொகையாக கிடைக்கும்.
இது கடந்த தொடரை விட 5.70 கோடி ரூபா அதிகமாகும்.
அதேபோல் இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 10.3 கோடி ரூபாவும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு 5.14 கோடி ரூபாவும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.