ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ நகரில் இன்று தொடங்கியது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா, முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது.
வடமாநிலங்களில் அதிக அளவு பனி பெய்வதால் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்பே தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தில் 4-0 என இந்தியா வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மந்தீப் சிங் (35-வது நிமிடம்), ஹர்மான்ப்ரீத் சிங் (46-வது நிமிடம்), வருண் குமார் (60-வது நிமிடம்), அஜித் பாண்டே (66-வது நிமிடம்) ஆகியோர் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு 3 புள்ளிகள் கிடைத்துள்ளது.