உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச்சென்றார் மெஸ்ஸி

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஆர்ஜன்ரீனாவின் லயோனல் மெஸ்ஸி ஐந்தாவது முறையாக தட்டிச்சென்றார்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான பரிந்துரை  பட்டியலில் ஆர்ஜன்ரீனாவின் மெஸ்ஸி, (28 வயது) போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ(30 வயது), பிரேசிலின் நெய்மர், ( 23 வயது)  இடம் பெற்றனர்.

இதற்கான விருது வழங்கும் விழா சுவிற்சர்லாந்தின் சூரிச்சில் நடந்தது.  வெற்றியாளரை தேர்வு செய்ய, சர்வதேச அளவில் 165 கால்பந்து அணிப் பயிற்சியாளர்கள், 162 அணிக் கப்டன்கள், 171 பத்திரிகையாளர்கள்   வாக்களித்தனர். மொத்த  வாக்குப்பதிவில் 41.33 சதவீதம் பெற்ற லயோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டினா, பார்சிலோனா) ‘பிபா’ விருதை தட்டிச் சென்றார்.  கடந்த முறை விருது வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துகல், ரியல் மாட்ரிட்) 27.76 சதவீத வாக்குகள் பெற்று பின்தங்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரேசில் வீரர் நெய்மருக்கு (பார்சிலோனா) 7.86 சதவீத வாக்குகள் கிடைத்தன.

மெஸ்ஸி முன்னிலை: ‘பிபா’ விருதை ஐந்தாவது முறையாக வென்றதன் மூலம் , இவ்விருதை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி (2009, 2010, 2011, 2012, 2015) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  இப்பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (3 முறை, 2008, 2013, 2014) இரண்டாவது இடத்தில் உள்ளார்.     கார்லிக்கு வாய்ப்பு : சர்வதேச அளவில் 136 கால்பந்து அணிப் பயிற்சியாளர்கள், 135 அணிக் கப்டன்கள், 106 பத்திரிகையாளர்கள்  அளித்த, சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் மொத்தமாக  35.28 சதவீதம் பெற்ற அமெரிக்காவின் கார்லி லொயிட் ‘பிபா’ சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார்.  ஜெர்மனியின் செலியா ஷாசிக் 12.60 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். ஜப்பானின் மியாமாவுக்கு ( 9.88 சதவீதங்கள்) மூன்றாவது இடம் கிடைத்தது.

உலகின்ஐந்தாவதுகால்பந்துசிறந்ததட்டிச்சென்றார்முறையாகமெஸ்ஸிவிருதைவீரருக்கான
Comments (0)
Add Comment