உலக கிண்ண எஞ்சிய போட்டியில் இருந்து விலகினார் முகமது இர்பான்

ஆஸ்திரேலியா-பாகிஸ்தானுக்கு இடையேயான காலிறுதி போட்டி வருகிற 20-ந்தேதி அடிலெய்டில் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் காயம் காரணமாக பங்கேற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது இர்பானுக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. 

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் முகமது இர்பானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் எஞ்சிய போட்டியில் இருந்த விலகினார்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி அதன் முக்கிய பந்து வீச்சாளர்களான அஜ்மல், உமர் குல், முகமது ஹபீஸ் போன்றவர்களை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்டில்ஆஸ்ரேலியாஇர்பான்காயம்காலிறுதிபங்கேற்புபாக்கிஸ்தான்முகமதுவீச்சாளர்வேகப்பந்து
Comments (0)
Add Comment