2015ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் உலகக்கிண்ண தொடரின் காலிறுதிக்குள் மேற்கிந்திய தீவுகள் அணி நுழைவது கடினம் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிரேம் சுமித் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் முன்னணி வீரர்கள் இல்லாமல் இருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கிறிஸ் கெய்ல், சாமுவேல்சுக்கு அதிக நெருக்கடி காணப்படும். புதுமுக அணிகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சவாலாக விளங்கும். இதனால் காலிறுதிக்கு நுழைவது கடினமான விடயம் என சுமித் சுட்டிக்காட்டியுள்ளார்.