உலக கோப்பை போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சதம்

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது இந்த ஆட்டத்தில் 101 ரன்கள் விளாசினார். உலக கோப்பை போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஒருவர் சதத்தை சுவைப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொயின்கான் 63 ரன்கள் எடுத்ததே உலக கோப்பையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறந்த ஸ்கோராக இருந்தது. 

2007-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் சர்ப்ராஸ் அகமது பெற்றார்.  இந்த உலக கோப்பையில் கலந்து கொண்ட 14 அணிகளில் ஆப்கானிஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் இப்போது சதத்தை பதிவு செய்து விட்டன. 

இந்த உலக கோப்பையில் விக்கெட் கீப்பர் அடித்த 7-வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டிகளில் விக்கெட் கீப்பர் மூலம் இதுவரை 15 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கராவின் பங்களிப்பு மட்டும் 5 சதமாகும். 

அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்டு 107 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில், டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணியின் கேப்டன் சதத்தை எட்டுவது இதுவே முதல் தடவையாகும். 

பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் காலால் ஸ்டம்பை மிதித்து ‘ட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார். உலக கோப்பை போட்டிகளில் ஒரு வீரர் ‘ட் விக்கெட்’ ஆவது இது 9-வது முறையாகும். இந்த உலக கோப்பையில் இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே ஜிம்பாப்வேயின் சகப்வா, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக இவ்வாறு அவுட் ஆகி இருந்தார்.

அகமதுஆட்டம்கீப்பர்சதம்சர்ப்ராஸ் அகமதுபாக்கிஸ்தான்ரண்விக்கட்
Comments (0)
Add Comment