உலக மல்யுத்த போட்டியில் பங்கேற்பது கடினம் – யோகேஷ்வர் தத்

கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் 65 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத், அடுத்த மாதம் நடைபெறும் உலக மல்யுத்த போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் தான். 

உலக போட்டி உஸ்பெகிஸ்தானில் செப்டம்பர் 8–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் செப்டம்பர் 19–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை நடக்கிறது. உலக போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் அந்த போட்டியில் கலந்து கொள்வது கடினம் என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.

காயம் எதுவும் ஏற்பட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சுவதாக கூறியுள்ளார். எதிராளியின் காலை பிடித்து சுழற்றி வீழ்த்துவது எனக்கு பிடித்தமான நுணுக்கம். அதனை எல்லா பந்தயங்களிலும் முயற்சிப்பேன் என்றும் அவர் சொன்னார்.

அடுத்தஉலகசந்தேகம்தான்நடைபெறும்பங்கேற்பதில்போட்டியில்மல்யுத்தமாதம்
Comments (0)
Add Comment