உலக ஹாக்கி லீக்: இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியத்தின் அண்ட்வர்ப் (Antwerp) நகரில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் மலேசிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில்  சத்பீர் சிங் (SATBIR SINGH) கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார்.

 அதனைத் தொடர்ந்து 17 மற்றும் 21வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி மலேசிய அணி, அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

மேலும் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் இந்தியாவின் ஜஸ்ஜித் சிங் (JASJIT SINGH) பதில் கோல் அடித்து சமன் செய்தார். போட்டி முடிய 4 நிமிடங்கள் இருந்தபோது, அவர் மீண்டும் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.  நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

அரையிறுதிஆடவர்இந்திய அணிஉலக ஹாக்கி லீக்கோல்பெல்ஜியம் அணிமுன்னேற்றம்வெற்றி
Comments (0)
Add Comment