இந்திய அணிக்காக ரூபிந்தர் பால் சிங் இரண்டு கோல்களும், லலித் உபத்யாய், யுவராஜ் வால்மீகி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
மேலும் ஆடவர் மற்றும் மகளிர் உலக ஹாக்கி லீக் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பெல்ஜியத்தில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.