உலக ஹாக்கி லீக் போட்டி: இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு!

உலக ஹாக்கி லீக் போட்டிக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீராங்கணை ரீத்து ராணி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி உலக ஹாக்கி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இவ்வணிக்கு தீபிகா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை பெல்ஜியத்தில் உலக ஹாக்கி லீக் தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து, பெல்ஜியம் அணிகளுடன் பி(B) பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாஉலக ஹாக்கி லீக் போட்டிபெல்ஜியம்மகளிர் அணிரீத்து ராணி
Comments (0)
Add Comment