எங்களை எங்கள் குடும்பத்தோடு வாழவிடு! திருச்சி தடுப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டம்

தமிழகம் திருச்சி தடுப்பு முகாமில் பல இலங்கை அகதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் சிலர் மூன்று வருடங்களுக்கு மேலாகவும் தொடர்ந்து தடுத்து வைக்கபப்ட்டுள்ளனர்.

இவர்கள் மீது அவுஸ்த்ரேலியா செல்ல முயற்சித்த வழக்கு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பிய வழக்கு போன்றவற்றினை காரணம் காட்டி பல வருடங்கள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தடவையும் தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் பல போராட்டங்களை நடத்திய பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 14,07.2017 தொடக்கம் தடுப்பு முகாமிலுள்ள 10 இலங்கை அகதிகள் தங்களை குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி நான்காவது நாட்களாக  தொடர்உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1) சுதர்சன் த/பெ. சுதாகரன்
2) தயாகரன் த/பெ. கிருஷ்ணபிள்ளை
3) குருவிந்தன் த/பெ. உமாகாந்தன்
4) தர்சன் த/பெ. ஜெகதீபன்
5) சத்தியசீலன் த/பெ. கந்தசாமி
6) ரொபின்பிரசாத் த/பெ. சகாயநாதன்
7) காந்தரூபன் த/பெ. சிவசுப்பிரமணியம்
8) குணசீலன் த/பெ. நாகராஜன்
9) யோககுமார் த/பெ. ரகுநாதன்
10) தயானந்தன் த/பெ. நமசிவாயம்

ஆகியோரே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை அகதிகளாவர்.

 

இலங்கை அகதிகள்உண்ணாவிரதம்சிறைதடுப்பு முகாம்திருச்சி
Comments (0)
Add Comment