எனது அப்பா எங்கே?


பள்ளி சுமந்த அவர் சுவடுகளைத் தேடுகிறேன்
அவர்கள் அழித்தது
என் நெஞ்சப்பிணைப்பையல்ல

அன்று அப்பாவின் தோளில் சாய்ந்ததும் பாய்ந்ததும்
பலகதைகளில் நுழைந்ததும்
எனதுள் அனலாய் அழுகிறது

மொழி எழுதி வழிகாட்டியர் இன்று
வழி ஒழுகி அழச்செய்தார் அம்மாபோல்

பசி அறிந்து
பாலூட்டிய என் தாயின் மடியில்
நினைவிழுந்த தவிப்புகளில் நனைந்து போறேன்.

காணாமல் ஆக்கப் பட்ட
என் தாதையின்
வாதையில் பீடிக்கிறது போர்

அரச பூதத்தின் கண்களில்
மேற்கிளம்புகிறது அநீதியின் தீ

ஒவ்வொரு இரவுகளையும்
கொய்து பார்க்கிறேன்
வெறும் கனவுகளாய்
அவை அறுக்கப்படுகின்றன

இழகிய எனது எண்ணங்களில் துளிர்க்கிறது
அப்பா வரும்
நம்பிக்கை மீதான நினைப்பு

மெல்ல என்னையும் அழிக்கப் பார்க்கிறது
பருந்துகளின் கண்கள்

-த.செல்வா

ஈழக் கவிதைஎங்கே எனது அப்பாகவிதைத.செல்வா
Comments (0)
Add Comment