வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களால் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தாம் தள்ளப்படுவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்திருந்தார்.
போர்க்குற்றம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், வட மாகாண சபை சுயாதீன விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் என வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்துவது தொடர்பிலேயே அவர் தமது கருத்தை வெளியிட்டார்.
இதன்போது வட மாகாண முதலமைச்சர் தொடர்பில் தயாசிறி ஜயசேகர கடும் விமர்சனமொன்றையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று வவுனியாவில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், தமது நண்பர் தயாசிறி ஜயசேகர தம்மை விரட்டியடிக்க வேண்டும் எனத் தெரிவித்தமை தொடர்பில் சிங்கள மொழியிலேயே பதிலை வழங்கினார்.