தரைமீது மலைபோல பகை நின்ற போதும்
தளராத துணிவோடு களமாடி வென்று
தரைக் கரும்புலியானீர்..
கடல்மீது படை கொண்டு
நிலம் விழுங்க வந்த…
பகை முடித்து முடிசூடி
கடற்கரும்புலியானீர்…
வானத்தின் மீதேறி
வண்டு போலச் சுற்றி வந்து
வானதிரும் சாகசம் செய்து
வான் கரும்புலியானீர்…
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விஸ்வரூபமாய் நிற்கும்..
கரும்புலிகள் வீரத்தைச் சொல
எந்த இலக்கணத்தில் சொல்லெடுக்க..
அம்மாவின் அன்பைச் சொல்ல வார்த்தையுண்டோ?
அப்பாவின் அரவணைப்புக்கு நிகருண்டோ…?
அகிலத்தின் அதிசயத்திற்கு குறைவுண்டோ?
அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு அர்த்தமுண்டோ…?
காற்றுக்கும் வேலியுண்டோ?
கரும்புலிகள் வீரத்துக்கும் நிகருண்டோ..?
கல்லுக்குள்ளே நீர் கசியுமல்லோ- எம்
கரும்புலிகள் உள்ளத்திலே அன்பு ஊற்றெடுக்குமல்லோ.
நேற்றுப்போல் இருக்கின்றது
நீங்கள் எம்மை விட்டு விலகி
பதினொரு ஆண்டுகளுக்கு முன் படையை பாய்ந்தழித்த
நினைவுநாள் இன்று.
தோழர்களே குளிர் உறையும்
காலைப்பொழுதினிலே உங்கள் நினைவுகள் சுமந்தபடி பயணிக்கின்றோம்.
இவர்களுடன் இன்றைய நாளில் பல்வேறு களம்களில்
வீரச்சாவைத்தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.