எமக்கான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத்தரும்! அடைக்கலம் நம்பிக்கை

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண்­பதில் இந்­தியா மிக அக்­க­றை­யோடு செயற்­பட்டு வரு­கி­றது. இந்­தி­யாவைத் தவிர வேறு எந்த நாடும் தமிழ் மக்­க­ளுக்கு எத­னையும் செய்யமுடி­யாது. இனப்பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு மற்றும் வாழ்­வா­தார உத­விகள் போன்­ற­வற்றை இந்­தி­யாவே பெற்­றுத்­தரும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார்.
கர­வெட்டி – இரா­ஜ­கி­ர­ாமத்தில் கர­வெட்­டிச்­சுடர் விளை­யாட்டுக்கழகம் நடத்­திய மே தினக் கூட்­டமும் பரி­ச­ளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிவன் அறக்­கட்­டளை நிதி­யத்தின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விட­யத்தில் இந்­தியா மிக அக்­க­றை­யோடு செயற்­ப­டு­கி­றது. இந்­தி­யாவைத் தவிர வேறு எந்த நாடும் தமிழ் மக்­க­ளுக்கு எத­னையும் செய்ய முடி­யாது. இனப்பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு மற்றும் வாழ்­வா­தார உத­விகள் போன்­ற­வற்றை இந்­தி­யாவே பெற்­றுத்­தரும். இந்­தி­யாவின் வாழ்­வா­தார உத­வி­களால் எம் மக்­களின் வாழ்க்­கைத்­தரம் உயரும். அர­சியல் தீர்­வா­னாலும் சரி, வாழ்க்­கைத்­தர உத­வி­க­ளா­னாலும் சரி இந்­தி­யாவைத் தவிர வேறு எந்த நாடும் எதுவும் செய்­யாது. அப்­படி அந்த நாடுகள் செய்­யு­மே­யானால் அது இந்­தி­யா­வுக்கு ஊடா­கவே செய்­ய­வேண்டும்.
இக் கிரா­மத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கத்­திற்குத் தெரி­வான இரு மாண­வர்­க­ளுக்கு சிவன் அறக்­கட்­டளை நிதியம் உத­வி­களை இந் நிகழ்­வில் ­வைத்து வழங்­கி­யுள்­ளது. இம் மாண­வர்­களின் பெற்­றோர்கள் பாராட்­டப்­பட்ட வேண்­டி­ய­வர்கள். அன்­றாடம் உழைத்­தால்தான் அடுப்­புகள் எரியும் என்ற நிலையில் கஷ்டப்­பட்டு பிள்­ளை­க­ளுக்கு கல்­வியை ஊட்டி அவர்­களை உரு­வாக்­கி­யுள்­ளார்கள். பெற்­றோர்கள் பிள்­ளை­களை கல்வி கற்கத் தூண்­ட­வேண்டும். அவர்கள் சீரான கல்­வியைப் பெற பெற்­றோர்கள் இடை­வி­டாத முயற்­சி­களை எடுத்­துக்­கொண்­டி­ருக்­க­வேண்டும். இம்­மு­யற்­சி­க­ளுக்கு சிவன் அறக்­கட்­டளை நிதியம் போதிய உத­வி­களை வழங்கும். பெற்­றோர்கள் வயோ­தி­பத்தை அடையும் வேளை எந்­த­வொரு பிள்­ளையும் யாரி­டமும் கையேந்­தக்­கூ­டாத நிலை உரு­வாக வேண்டும். அதனை உணர்ந்து பெற்­றோர்கள் பிள்­ளை­களைக் கல்­வியில் உயர்த்­த­வேண்டும்.
கடந்த 30 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் பிரேம­தா­ஸ­வினால் மாதிரிக் கிரா­மத்­திட்­டத்தின் கீழ் இக் கிராம மக்­க­ளுக்கு வீடுகள் கட்டி வழங்­கப்­பட்­டன. அவ் வீடுகள் பழு­த­டைந்­துள்­ளன. மழைக்காலங்­களில் மழைநீர் ஒழுக்கேற்­பட்­டுள்­ளது. இவ் வீடு­களின் தற்­போ­தைய நிலையை பார்க்­கின்­ற­போது. மிகவும் மன­வே­தனை தரு­கி­றது. இந்த வீட்டுத்திட்­டத்­திற்கு இந்­தியத் தூதுவர் உதவவேண்டும். இதே­வேளை வீட்­டுத்­திட்ட அமைச்­ச­ராக பிரேம­தா­ஸவின் மகன் சஜித் பதவி வகிக்­கிறார். அவரை நான் சந்­தித்து இவ் வீட்டுத் திட்­டத்தை மறு­சீரமைக்க கோர­வுள்ளேன் எனத்­தெ­ரி­வித்தார்.
இத­னை­ய­டுத்து நிகழ்வில் கலந்­து­கொண்ட யாழ். இந்­தியத் தூதுவர் ஆர்.நட­ராஜன் உரை­யாற்­று­கையில்,
பொரு­ளா­தார வசதி குறைந்த மக்கள் நிறைந்த கிரா­மத்­திற்கு வந்­த­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். இக் கிரா­மத்தின் கஷ்ட நஷ்­டங்­களை உணர்ந்­துள்ளேன். இக் கிரா­மத்துப் பிள்­ளை­க­ளுக்கு கல்வி அவ­சி­ய­மா­னது. இன்­றைய சந்­த­திக்கு நல்ல கல்­வி­ய­றி­வை­யூட்டி எதிர்­கா­லத்தில் இக்­கி­ரா­மத்தில் அறி­யாமை என்ற வார்த்தை இருக்­கக்­கூடாது. அதற்­கேற்ற மாதிரி கல்­வி­ய­றிவு முன்­னேற்றம் அடை­ய­வேண்டும் எனத் தெரி­வித்தார். கடந்த முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் பார்த்த இரா­ஜ­கி­ராமம் அப்போது போலவே இப்­போதும் இருந்து வருகி­றது.
இக் கிரா­மத்தை அபிவிருத்தி செய்து. சிறார்களுக்கு நல்ல கல்வியறிவை வழங்கி அவர்களை உயர்த்துவதே எனது நோக்கம் என தெரிவித்த சிவன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம், அதற்கான வேலையை இந்தக் கிராமத்தில் ஆரம்பித்துள்ளேன். எதிர்வரும் நான்கு வருடகாலத்தில் கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி இக் கிராமத்தை மாற்றிக்காட்டுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளேன் என்றார்.

 

அபிவிருத்திஅரசியற்தீர்வுஇந்தியாஇனப்பிரச்சனைகிழக்குசெல்வம் அடைக்கலநாதன்தீர்வுவடக்கு
Comments (0)
Add Comment